ஐ.பி.ஏ - International Phonetic Alpahbets

ஐ.பி.ஏ என்பது International Phonetic Alpahbets என்றழைக்கப்படும் சர்வதேச ஒலியியல் எழுத்துக்களை குறிக்கும். அனைத்து ஒலிகளையும் துல்லியமாக காட்டுவதற்காக உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறை இது. உலகில் உள்ள அனைத்து மொழிகளின் ஒலிகளையும் காட்டுவதற்கான எழுத்துக்கள் இதில் உள்ளது.

தமிழ் எழுத்துமுறையானது ஒரு ஒலிக்குறி சார்ந்த (Phonemic) எழுத்துமுறையாகும். ஒரு மொழியின் அடிப்படை ஒலியாக கருதப்படுவதே ஒலிக்குறி (Phoneme). தமிழ் இலக்கணம் பொதுவாக தமிழை வெறும் 18 (மெய்) + 12 (உயிர்) + 1 (ஆய்தம்) ஒலிக்குறிகள் அடங்கியதாக கருதினாலும், தமிழில் கிட்டத்தட்ட 100 ஒலிகள் உள்ளன. ஒரு சாமான்யன் மொழியை பேசும்போதோ இல்லை கேட்க்கும் போது இதை அறியமாட்டான். ஆனாலும், துல்லியமாக ஆராயுங்கால் ஒவ்வொரு ஒலிக்குறிக்கும் பல்வேறு மாற்றொலிகள் இருப்பதை அறியலாம். (ஒரு ஒலிக்குறிப்பின் திரிபாக கருதப்படும் ஒலியே மாற்றொலி ஆகும்) 

ஒரு மொழியில் பல்வேறு ஒலிகள் இருந்தாலும், அது ஒரே ஒலிக்குறியின் மாறுபாட்டு ஒலிகளாக கருதப்படும். உதாரணமாக /க/ என்ற எழுத்துக்குறி சுட்டும் /k/ என்ற ஒலிக்குறியை எடுத்துக்கொள்வோம். அதற்கு கிட்டத்தட்ட 8 மாற்றொலி வேறுபாடுகள் உள்ளன. கீழ்க்கண்ட உதாரணங்களில், எவ்வாறு பல்வேறு ஒலிகளை வெளிப்படுத்துகிறது என்பதை காணவும்.

தமிழ்
ஐ.பி.ஏ ஒலிப்பெயர்ப்பு
ஒலியின் வகை
கால்
kɑ:l
Voiceless Velar Plosive
நோக்கி
n̺o:kkʲɪ·
Palatized Voiceless Velar Plosive
தங்ம்
ˀʌŋgʌm
Voiced Velar Plosive
தங்கி
t̪ʌŋʲgʲɪ·
Palatized Voiced Velar Plosive
வாய்க்க
ʋɑ:jccə
Voiceless Palatal Plosive
ம்
ˀʌxʌm
Voiceless Velar Fricative
மார்ழி
mɑ:rɣʌ˞ɻɪ·
Voiced Velar Fricative
கி
ˀɑ:çɪɪ̯ə
Voiceless Palatal Fricative
  
சாமன்யனுக்கு இந்த 8 ஒலிகளும், /க/ ~ /k/ என்ற ஒலிக்குறியின் வேறுபாட்டு ஒலிகளாகத்தான் தெரியும்.

தாங்கள் கான்பது போல், /க/ என்ற ஒன்று இப்படி பல்வேறு விதமாக மாற்றொலிகளை கொண்டுள்ளது. இதே போல, 12 உயிரொலிக்குறிகளும், 18 மெய்யொலிக்குறிகளும் பலதரப்பட்ட மாறுபாடுகளை கொண்டுள்ளன. இவ்வனைத்து மாற்றொலிகளையும் சேர்த்துக்கொண்டால், ஆகமொத்தமாக, கிட்டத்தட்ட 100 தனிப்பட்ட ஒலிகள் தமிழில் உள்ளன.
  
ஏட்டளவில், ஒவ்வொரு எழுத்துக்குறியும் (ஓர் எழுத்துமுறையின் அடிப்படைக்கூறு எழுத்துகுறி) தனிப்பட்ட ஒலிக்குறியை சுட்டுகிறது. ஆனாலும், நவீன தமிழ் சில ஒலிக்குறிகளை இழந்து விட்டதால், இரு எழுத்துக்குறிகள் ஒரே ஒலிக்குறியை சுட்டுவதாக அமையலாம். உதாரணமாக உயிரிடை ற &  மற்றும் ன &

தமிழ் ஒலிக்குறிகள் மற்றும் அவற்றின் மாற்றொலிகளின் விரிவான ஆய்வுக்கு கீழ்க்கண்ட நூலைக் காணவும்:

  • பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு - ISBN : 9788189708606

தமிழை பிற மொழிகளில் ஒலிபெயர்க்க தமிழ் மாற்றொலிகளின் அறிவு மிகவும் அத்தியாவசியம் ஆகும்.
   
இக்கருவி, தமிழ் உரையில் உள்ள ஒலிக்குறிகளை ஆராய்ந்து, அதற்கேற்ற மாற்றொலிகளை ஐ.பி.ஏ எழுத்துக்களாக மாற்றி வெளியிடுகிறது.

இவ்வாறு ஒரு தமிழ் உரையை கொடுத்தால்:

மின்னுலகில் தமிழ் என்றும் நிலை பெற தமிழின் வளங்களை மின்பதிப்பாக்கி நிரந்தரப்படுத்த நிறுவிய தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னரங்கம் இது. இங்கு தமிழ் எழுத்தை, கலை வடிவங்களை எப்படி நிரத்தரப்படுத்தலாமென ஆலோசிக்கப்படுகிறது. சமகால இலக்கியத்திலிருந்து பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள இலக்கியம் வரை தமிழ் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. மின் தமிழ்த் தேர் உலா வரத் தொடங்கிவிட்டது. வடம் பிடிக்க வாரீர்

கீழ்க்கண்டவாறு ஐ.பி.ஏ முறையில் ஒலிபெயர்க்கும்:

mɪn̺n̺ɨlʌçɪl t̪ʌmɪ˞ɻ ʲɛ̝n̺d̺ʳɨm n̺ɪlʌɪ̯ pɛ̝ɾə t̪ʌmɪ˞ɻɪn̺ ʋʌ˞ɭʼʌŋgʌ˞ɭʼʌɪ̯ mɪn̺bʌðɪppɑ:kkʲɪ· n̺ɪɾʌn̪d̪ʌɾʌppʌ˞ɽɨt̪t̪ə n̺ɪɾɨʋɪɪ̯ə t̪ʌmɪ˞ɻ mʌɾʌβʉ̩ ˀʌɾʌkkʌ˞ʈʈʌ˞ɭʼʌjɪ̯ɪn̺ mɪn̺n̺ʌɾʌŋgʌm ʲɪðɨ .  ʲɪŋgɨ t̪ʌmɪ˞ɻ ʲɛ̝˞ɻɨt̪t̪ʌɪ̯ ,  kʌlʌɪ̯ ʋʌ˞ɽɪʋʌŋgʌ˞ɭʼʌɪ̯ ʲɛ̝ppʌ˞ɽɪ· n̺ɪɾʌt̪t̪ʌɾʌppʌ˞ɽɨt̪t̪ʌlɑ:mɛ̝n̺ə ˀɑ:lo:sɪkkʌppʌ˞ɽɨçɪɾʌðɨ .  sʌmʌxɑ:lə ʲɪlʌkkʲɪɪ̯ʌt̪t̪ɪlɪɾɨn̪d̪ɨ pʌllɑ:ɪ̯ɪɾʌmɑ˞:ɳɖɨ t̪o̞n̺mʌjɪ̯ɨ˞ɭɭə ʲɪlʌkkʲɪɪ̯ʌm ʋʌɾʌɪ̯ t̪ʌmɪ˞ɻ pɑ:ðɨxɑ:kkʌppʌ˞ɽə ʋe˞:ɳɖɪɪ̯ɨ˞ɭɭʌðɨ .  mɪn̺ t̪ʌmɪ˞ɻt̪ t̪e:r ʷʊlɑ: ʋʌɾʌt̪ t̪o̞˞ɽʌŋʲgʲɪʋɪ˞ʈʈʌðɨ .  ʋʌ˞ɽʌm pɪ˞ɽɪkkə ʋɑ:ɾi:r

மேற்கண்ட உரை சரியாக காணப்படாத நிலையில், கீழ்கண்ட ஃபாண்ட்களை டவுன்லோடு செய்யவும்: Dejavu Sans & Dejvu Serif

வரம்புகள்
இக்கருவி சொற்பிரிவுகளை கண்டுகொள்வதில்லை. இதனால் கொஞ்சம் பிறழ்சியான ஒலிப்பெயர்ப்பு செய்யப்படலாம்.

உதாரனமாக் இச்சொல்லை எடுத்துக்கொள்ளவும்: Consider the word - முகில்பார்க்கும் - இக்கருவி அதை - mʊçɪlβɑ:rkkɨm Voiced Biliabial fricative உடன் ஒலிப்பெயர்க்கும். ஆனால், நமக்கு வேண்டியது - Voiceless bilabial plosive என்ற ஒலியுடன் - mʊçɪlpɑ:rkkɨm என்ற ஒலிப்பெயர்ப்பு .

இவ்வாறு நிகழ்வது எதனால் என்றால், முகில்|பார்க்கும் என்ற சொல்லில் சொற்பிரிவு உள்ளது. எனவே வழக்கமான ஒலிப்பெயர்ப்பு விதிகள் இங்கு பொருந்தாது. இப்போதை, தானாக சொற்பிரிவு கண்டறிதல் சாத்தியம் இல்லை.:-) 

ஆகவே, இது போன்ற சொற்கள் வரும்நிலையில், அச்சொல்லிடைய “ “ வெற்றிடத்தை இட்டு, பிறகு கருவியில் இடவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை