யாப்பு

மோனை

ஒரு சீரின் முதலெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருவது மோனை ஆகும்.

மோனை எழுத்துக்கள்

நேரடியாகவே ஒன்றி வரும் எழுத்துக்களைத் தவிர்த்து (கரம்-ன்னை, குடை-குழை முதலியன போல)கீழ்க்கானும் எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று மோனை ஆகும்

அ - ஆ - ஐ - ஔ


இ - ஈ - எ - ஏ

உ - ஊ - ஒ -ஓ

ஞ - ந

ம - வ

த - ச

வலை - மனை - மோனை
ஞாயிறு - நான் - மோனை
கலை - காளை - மோனை

பா உதாரணம்

அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி
அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி
அம்பொன் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்
அவிர்மதி அனைய திருநுதல் அரிவை
அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த
கருங்கயல் நெடுங்கண் நோக்கம்என்
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே

எதுகை

ஒரு சீரின் இரண்டாமெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருது மோனை ஆகும். இரண்டாம் எழுத்து பொருந்தும் அதே நேரத்தில், இரு சொற்களுடைய முதலெழுத்துக்களின் மாத்திரை அளவுகளும் பொருந்தி வர வேண்டியது அவசியம்.

படம் குடம் - எதுகை
பாடம் கூடம் - எதுகை

படம் கூடம் - எதுகை அல்ல
பாடம் குடம் - எதுகை அல்ல
வஞ்சிப்பாவினம்
Print
E-mail

வஞ்சிப்பாவினம்
வஞ்சித்தாழிசை
மடப்பிடியை மதவேழம்
தடக்கையான் வெயில்மறைக்கும்
இடைச்சுரம் இறந்தார்க்கே
நடக்குமென் மனனேகாண்
பேடையை இரும்போத்துத்
தோகையான் வெயில்மறைக்கும்
காடகம் இறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்
இரும்பிடியை இகல்வேழம்
பெருங்கையான் வெயில்மறைக்கும்
அருஞ்சுரம் இறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்

வஞ்சித்துறை
பொருந்து போதியில்
இருந்த மாதவர்
திருந்து சேவடி
மருந்து ஆகுமே!

வஞ்சி விருத்தம்
அணிதங்கு போதி வாமன்
பணிதங்கு பாதம் அல்லால்
துணிபொன் றிலாத தேவர்
மணிதங்கு பாதம் மேவார்
கலிப்பாவினம்
கலித்தாழிசை
வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்
கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

கலித்துறை
ஆவி அந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்
தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த
ஓவி யம்புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள்

கட்டளை கலித்துறை
தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே

கலிவிருத்தம்
பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்
நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான்
மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம்
காணநோற் றிலனவன் கமலக் கண்களால்
கலி விருத்தம்

பே ணநோற்
றது மனைப்
பிற வி
பெண் மைபோல்
நேர் நிரை
நிரை நிரை
நிரை நேர்
நேர் நிரை
கூவிளம்
கருவிளம்
புளிமா
கூவிளம்
நா ணநோற்
றுயர்ந் தது
நங் கை
தோன் றலான்
நேர் நிரை
நிரை நிரை
நேர் நேர்
நேர் நிரை
கூவிளம்
கருவிளம்
தேமா
கூவிளம்
மா ணநோற்
றீண் டிவள்
இருந்
வா றெலாம்
நேர் நிரை
நேர் நிரை
நிரை நேர்
நேர் நிரை
கூவிளம்
கூவிளம்
புளிமா
கூவிளம்
கா ணநோற்
றில னவன்
கம லக்
கண் களால்
நேர் நிரை
நிரை நிரை
நிரை நேர்
நேர் நிரை
கூவிளம்
கருவிளம்
புளிமா
கூவிளம்

  வெண்பா     

நேரிசை வெண்பா    

ஒரு விகறபம்

கூற்றங் குமைத்த குரைகழற்காற் கும்பிட்டுத்
தோற்றந் துடைத்தேந் துடைத்தேமாற் - சீற்றஞ்செய்
யேற்றினான் றில்லை யிடத்தினா னென்னினியாம்
போற்றினா னல்கும் பொருள்

இரு விகற்பம்

மாதவா போதி வரதா வருளமலா
பாதமே யோத சுரரைநீ - தீதகல
மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த்
தாயே யலகில்லா டாம்

இன்னிசை வெண்பா

ஒரு விகற்பம்

துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்

பல விகற்பம்

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்

சிந்தியல் வெண்பா

நேரிசை சிந்தியல் வெண்பா

அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப - செறிந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு

இன்னிசை சிந்தியல் வெண்பா

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை

குறள் வெண்பா

ஒரு விகற்பம்

முற்ற உணர்ந்தானை ஏத்தி மொழிகுவன்
குற்றமொன்று இல்லா அறம்

இரு விகற்பம்

நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும்
தொக்க அறச்சொல் பொருள்

பஃறொடை வெண்பா

வையக மெல்லாங் கழினியா வையகத்துட்
செய்யகமே நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்துள்
வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின்
சாறேயந் நாட்டிற் றிலையூர்கள் சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங்க் கட்டியுட்
டானேற்ற மான சருக்கரை மாமணியே
ஆணேற்றான் கச்சி யகம்

கலிவெண்பா

ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா

அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
முழுதுணர் முனிவநிற் பரவுதும் தொழுதக
ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு
முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்
தோங்குநீர் உலகிடை யாவரும்
நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே

இணைக்குறள் ஆசிரியப்பா

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே

நிலைமண்டில ஆசிரியப்பா

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பி னுயர்ந்தோன் வென்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்
முற்ற வுணர்ந்த முதல்வா வென்கோ
காமற் கடந்தோய் ஏம மாயோய்
தீநெறிக் கடும்பகை கடுந்தோ யென்கோ
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி
நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனோ

கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஒங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே

வெண்கலிப்பா

ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து
வஞ்சிப்பா
குறளடி வஞ்சிப்பா
அங்கண்வானத் தமரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தல் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
கொங்கிவரசோகின் கொழுநிழற்கீழ்ச்
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையும் முக்குடைநிழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
அனந்தசதுட்டயம் அவையெய்த
நனந்தலையுலகுடை நவைநீங்க
மந்தமாருதம் மருங்கசைப்ப
அந்தரந்துந்துபி நின்றியம்ப
இலங்குசாமரை எழுந்தலமர
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந்
தருள்நெறி நடாத்திய ஆதிதன்
திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே

சிந்தடி வஞ்சிப்பா
கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன
வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன
பணையெருத்தின் இணையரிமான் அணையேறித்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயினடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன்
புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறும் நாற்கதி; வீடுநனி எளிதே

வெண்பாவினம்

குறள் வெண்பா

குறள் வெண்செந்துறை

போதிநிழற் புனிதன் பொலங்கழல்
ஆதி உலகிற் காண்

குறட்டாழிசை

நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநல்
கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே

வெண்டாழிசை


நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்

வெண்டுறை

படர்தருவெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப் பவதொடர்பாற் படராநிற்கும்
விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக் கொழிபுண்டோ வினையேற்கம்மா
விடர்பெரிது முடையேன்மற் றென்செய்கே னென்செய்கே
னடலரவ மரைக்கசைத்த வடிகேளோ வடிகேளோ

வெளிவிருத்தம்

மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்!
அருள்இருந்த திருமொழியால் அறவழக்கங் கேட்டிலனால்! - என்செய்கோயான்!
பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்!
 

ஆசிரியப்பாவினம்

ஆசிரியத் தாழிசை

வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்

ஆசிரியத் துறை

இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா
அரங்கு மணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்
அரங்கு மணிபொழிலா ஆடு மாயின்
மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்ததிளவேனில்

ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தொழும்அடியர் இதயமலர் ஒருபொழுதும் பிரிவரிய துணைவர் எனலாம்
எழும்இரவி கிரணநிகர் இலகுதுகில் புனைசெய்தருள் இறைவர் இடமாம்
குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர கவனும் எவரும்
தொழுகைய இமையவரும் அறம்மருவு துதிசெய்தெழு துடித புரமே!

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தோடார் இலங்கு மலர்கோதி வண்டு வரிபாட நீடு துணர்சேர்
வாடாத போதி நெறிநீழல் மேய வரதன் பயந்த அறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளும் முயல்வார்
வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப வினைசேர்தல் நாளும் இலரே

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எண்டிசையும் ஆகி இருள்அகல நூறி எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி
வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து மழைமருவு போதி உழைநிழல்கொள் வாமன்
வெண்டிரையின் மீது விரிகதிர்கள் காண வெறிதழல்கொள் மேனி அறிவனெழில் மேவு
புண்டரிக பாதம் நமசரனம் ஆகும் எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்

வஞ்சிப்பாவினம்
வஞ்சித்தாழிசை
மடப்பிடியை மதவேழம்
தடக்கையான் வெயில்மறைக்கும்
இடைச்சுரம் இறந்தார்க்கே
நடக்குமென் மனனேகாண்
பேடையை இரும்போத்துத்
தோகையான் வெயில்மறைக்கும்
காடகம் இறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்
இரும்பிடியை இகல்வேழம்
பெருங்கையான் வெயில்மறைக்கும்
அருஞ்சுரம் இறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்

வஞ்சித்துறை
பொருந்து போதியில்
இருந்த மாதவர்
திருந்து சேவடி
மருந்து ஆகுமே!

வஞ்சி விருத்தம்
அணிதங்கு போதி வாமன்
பணிதங்கு பாதம் அல்லால்
துணிபொன் றிலாத தேவர்
மணிதங்கு பாதம் மேவார்

கருத்துகள்

  1. அழகான யாப்பு குறித்த தகவல். ஒரே இடத்தில் அனைத்தும் தொகுத்து இருப்பது பாராட்டதக்கது. வாழ்த்துகள், அருமையான பணி

    சதாசிவம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை