சங்கங்கள்
சங்கங்கள்
நான்கு தமிழ்ச் சங்கங்கள்
பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும் தங்கள் தலைநகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய முப்பெரும் தமிழ்ச்சங்கங்கள் அழிந்து போன போதிலும் நான்காம் தமிழ்ச் சங்கம் இன்றும் இயங்கி கொண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றே. தமிழ்ச் சங்கங்களைப் பற்றியும், சங்க வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும் அறிய பல இலக்கியச் சான்றுகள் உதவுகின்றன.
சங்கச் சான்றுகள்
1. கடைச்சங்கப் புலவராகிய சீத்தலைச்சாத்தனார்
“புலம்புரிச் சங்கம் பொருளொடு முழுங்க” என மணிமேகலையில் கையாண்டுள்ளார். மற்றுமோரிடத்தில்,
“புலம்புரிச் சங்கம் பொருளொடு முழுங்க” என மணிமேகலையில் கையாண்டுள்ளார். மற்றுமோரிடத்தில்,
“பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மனிய மழை வளமிழந்தது புலவரை எல்லாம் வம்மின் யான் உங்களைப் புரந்தரகில் லேன்”
என்கிறார். இதன் மூலம் பாண்டியர்கள் சங்கம் வளர்த்தனர் எனத் தெளிவாகிறது.
2. முச்சங்கச் செய்திகளையும் வரலாறுகளையும் தனியொரு அகவற்பாவாலும், சிலப்பதிகாரத்தாலும், இறையனார் களவியல் உரைகளாலும் அறிய முடிகிறது. பிற்கால திருவிளையாடலிலும் சில சங்கச் செய்திகள் உள்ளன.
3. “மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மகா பாரதம் தமிழ்ப் படுத்தும்” எனச் செப்புகிறது சின்னமனூர் செப்பேடு – பாண்டியன் மெய்க்கீர்த்தி.
மகா பாரதம் தமிழ்ப் படுத்தும்” எனச் செப்புகிறது சின்னமனூர் செப்பேடு – பாண்டியன் மெய்க்கீர்த்தி.
4. “தலைச் சங்கப் புலவனார் தம்முள்” – பெரிய புராணம்
5. “சங்கத் தமிழ் மூன்றும் தா” – ஔவையார்.
6. “புகலி ஞானசம்பந்தன் உரை செய்
சங்கமலி செந்தமிழ்கள்” – திருஞானசம்பந்தர். திருவாதவூர்
சங்கமலி செந்தமிழ்கள்” – திருஞானசம்பந்தர். திருவாதவூர்
7. “இமிழ்குரல் முரசன் மூன்றுடன் நாளும்
தமிழ்கெழு கூடல் தண் கோல்வேந்தே” – காரிக் கண்ணனார் புறம் 56.
தமிழ்கெழு கூடல் தண் கோல்வேந்தே” – காரிக் கண்ணனார் புறம் 56.
8. “தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்” – மதுரைக்காஞ்சி 761 – 763.
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்” – மதுரைக்காஞ்சி 761 – 763.
9. “தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை” – சிறு பாணாற்றுப்படை 66-67
மகிழ்நனை மறுகின் மதுரை” – சிறு பாணாற்றுப்படை 66-67
10. “நிலனாவிற்றிரிதருஉம் நீண்மாடக்கூடலார்
புலனாவிற் பிறந்த சொற்புதிதுண்ணும் பொழுதன்றோ” – கலித்தொகை 35
புலனாவிற் பிறந்த சொற்புதிதுண்ணும் பொழுதன்றோ” – கலித்தொகை 35
11. “சங்க முத்தமிழ்” – ஆண்டாள் பெரிய திருமொழி
12. “பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாது” புறந்திரட்டு – புகழ்மாலை
மேல்காணும் பல்வேறு இலக்கியச் சான்றுகளின் வாயிலாக முச்சங்கங்கள் இருந்த உண்மைகளை தெளிவாக உணரமுடிகிறது. மேலும் நக்கீரனாரின் இறையனார் அகப்பொருளைரையும் கடைச் சங்கம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றது. இன்னும் பல ஆதாரங்கள் உண்டு.
http://www.tamileluthu.org/tamil-sangam/
கருத்துகள்
கருத்துரையிடுக