இடுகைகள்

ஐ.பி.ஏ - International Phonetic Alpahbets

ஐ.பி.ஏ என்பது I nternational P honetic A lpahbets என்றழைக்கப்படும் சர்வதேச ஒலியியல் எழுத்துக்களை குறிக்கும். அனைத்து ஒலிகளையும் துல்லியமாக காட்டுவதற்காக உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறை இது. உலகில் உள்ள அனைத்து மொழிகளின் ஒலிகளையும் காட்டுவதற்கான எழுத்துக்கள் இதில் உள்ளது. தமிழ் எழுத்துமுறையானது ஒரு ஒலிக்குறி சார்ந்த ( Phonemic) எழுத்துமுறையாகும். ஒரு மொழியின் அடிப்படை ஒலியாக கருதப்படுவதே ஒலிக்குறி ( Phoneme). தமிழ் இலக்கணம் பொதுவாக தமிழை வெறும் 18 ( மெய்) + 12 ( உயிர்) + 1 ( ஆய்தம்) ஒலிக்குறிகள் அடங்கியதாக கருதினாலும் , தமிழில் கிட்டத்தட்ட 100 ஒலிகள் உள்ளன. ஒரு சாமான்யன் மொழியை பேசும்போதோ இல்லை கேட்க்கும் போது இதை அறியமாட்டான். ஆனாலும் , துல்லியமாக ஆராயுங்கால் ஒவ்வொரு ஒலிக்குறிக்கும் பல்வேறு மாற்றொலிகள் இருப்பதை அறியலாம். (ஒரு ஒலிக்குறிப்பின் திரிபாக கருதப்படும் ஒலியே மாற்றொலி ஆகும்)   ஒரு மொழியில் பல்வேறு ஒலிகள் இருந்தாலும் , அது ஒரே ஒலிக்குறியின் மாறுபாட்டு ஒலிகளாக கருதப்படும். உதாரணமாக /க/ என்ற எழுத்துக்குறி சுட்டும் / k/ என்ற ஒலி...

தமிழில் வடவெழுத்துக்கள்

படம்
தமிழில் வடவெழுத்துக்கள் - சிறிது சிக்கலான விவகாரமான தலைப்பு தான் ,    ஆனாலும் , வரலாற்று ரீதியில் ஆராயப்படவேண்டிய ஒரு தலைப்பு.    சமஸ்கிருதத்திற்கு என்று தனிப்பட்ட ரீதியில் எந்த எழுத்துமுறையும் (லிபியும்) கிடையாது. அந்தந்த பகுதியில் வழக்கில் உள்ள லிபியில் தான் சமஸ்கிருத மொழி எழுதப்பட்ட வந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காந்தாரத்தில் கரோஷ்டி லிபியிலும் , பிராமி லிபி தோன்றியவுடன் சில நூற்றாண்டுகள் பிராமியிலும் வழங்கி வந்தது.    பிராமி லிபி , அந்த பகுதிக்கு ஏற்றவாறு காலம் செல்ல செல்ல குப்த பிராமி , குஷன் பிராமி என்று திரிந்தது. அதிலிருந்து சித்தம் (இன்றும் ஜப்பான் நாட்டில் சமஸ்கிருதம் எழுத பயன்பட்டு வருகிற்து ) சாரதா போன்ற லிபிகள் தோன்றின. சித்தம் நாகரி லிபியாக மாற்றமடைந்து , தற்போதைய வடிவில் தேவநாகரியாக உள்ளது.             [ துணைச்செய்தி : பிராமியின் பெயர் தோற்றத்திக்கு வருவோம். ஜைனர்களின் நம்பிக்கையின் படி , எண்னையும் எழுத்தையும் பிற கலைகள் அனைத்தையும் தோற்றுவித்தது ஆதீஸ்வர் ஸ்ரீவிர...