இடுகைகள்
நாவலந் தீவு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
" நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது , ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா , தென் ஆப்ரிக்க , இலங்கை , மற்றும் இன்றுள்ள சில சிறு , சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ". ஏழுதெங்க நாடு , ஏழுமதுரை நாடு , ஏழுமுன்பலை நாடு , ஏழுபின்பலை நாடு , ஏழுகுன்ற நாடு , ஏழுகுனக்கரை நாடு , ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி , குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!. குமரிக்கொடு , மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை , கபாடபுரம் , முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்