தமிழர் எண் விளையாட்டுகள்
தமிழர் எண் விளையாட்டுகள் http://ta.wikipedia.org/s/zu5 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல் , தேடல் சிறுவர் முதல் பெரும் புலவர்கள் வரை எண்களைக் கொண்டு விளையாடி மகிழ்வதற்கென சில பாடல்கள் , விடுகதைகள் போன்றவைகளை அமைத்திருக்கின்றனர். இவைகளை எண் விளையாட்டு என்கின்றனர். பொருளடக்கம் 1 சிறுவர் விளையாட்டு 2 பள்ளிச் சிறுவர் மறை விளையாட்டு 3 எண் புதிர் விளையாட்டு 4 விடுகதை விளையாட்டு 4.1 தமிழ் எண் விளையாட்டு 4.2 ஊர் பெயர் விளையாட்டு 5 இலக்கியத்தில் எண் விளையாட்டு 6 பார்க்க சிறுவர் விளையாட்டு “ ஒரு குடந் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது ” என்று ஒன்று முதல் பத்து வரை இருவர் எதிரெதிராக இடைவெளிவிட்டு நின்று கைகளை மேலே தூக்கிக் கோர்த்துக் கொள்ள அதன் இடைவெளியில் மற்றவன் புகுந்து சொல்லிச் செல்லும் போது பத்தாவது எண் சொல்லப்படும் போது நுழைபவன் பிடித்துக் கொள்ளப்படுவான். பிடிபடாமல் தப்புவது அவன் திறமையைப் பொறுத்தது. இப்படி எண்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டு இன்றும் உள்ளது. பள்ளிச் சிறுவர் மறை விளையாட்டு எண் விள