பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு
பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு முனைவர்பி.ஆர்.இலட்சுமி பி.லிட்.,எம்.ஏ.,எம்.ஏ., எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி.,டிஎல்பி.,டிசிஎஃஇ.,பிஜிடிசிஏ., தமிழ்த்துறை வல்லுநர், சென்னை. தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்துள்ள நகரம் திண்டிவனம். சென்னையிலிருந்து திண்டிவனத்திற்குச் செல்ல இரண்டரை மணி நேரமாகும். திண்டிருணிவனம் என அழைக்கப்படும் புளியங்காடு - திண்டிவனம் கிராமம் சார்ந்த பகுதியாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் கிடங்கில் என்னும் ஊர் திண்டிவனத்தை அடுத்து இருப்பதாலும், இந்நகரத்தை அடுத்துள்ள பெரமண்டுர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் பழமையானதாக இருப்பதாலும் இக்கிராமத்தில் வாழும் மக்களின் நிலையினை இவ்வாய்வுக்கட்டுரை எடுத்துக்காட்டி விளக்குகிறது. பெரமண்டுரினை அடுத்த முட்டியூரில் வாழும் பெண் பதினெட்டு வருடங்களுக்கு முன் குரங்கு முகத்துடனும்,சிறிய வாலுடனும் பிறந்த குழந்தையைப் புதைத்ததாகக் குறிப்பிடும்போது அவரிடம் தினோசரின் படத்தினைக்காட்டி குழந்தை இது