Tuesday, 23 February 2016

OLD COINS N SANGAM PERIOD

சங்க காலத்து நாணயங்கள்.

Picture
ராஜராஜர் நாணயம்
நாணயங்கள்:
சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.


ராஜராஜர்  நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோம்

Picture
ராஜராஜர்(தேவநாகரியில்) நாணயம்
 ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Picture
2ஆம் கி மு சேரர் நாணயம்
2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள்.
முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது.

Picture
2ஆம் கி மு சேரர் நாணயம்
பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Picture
பாண்டியர் நாணயம்
சங்க காலத்து பாண்டியர் நாணயம். கி மு ஒன்றாம் நூற்றாண்டு.
முன்பக்கம் கம்பீர ஆண் யானை

Picture
பாண்டியர் நாணயம்
பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Picture
சோழர் நாணயம்
சங்க காலத்து சோழர் நாணயம். இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது.

Picture
சோழர் நாணயம்
பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Picture
சேரர் காசு.
வட்டமான சேரர் காசு. முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம்.

Picture
சேரர் காசு.
பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Picture
மலையமான் காசு
மலையமான் காசு.இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம்

Picture
மலையமான் காசு

 பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ள

No comments:

Post a Comment