சனி, 12 டிசம்பர், 2015

தமிழ் வளர்ச்சி

                                                           தமிழ் வளர்ச்சி
 உலகெங்கிலும்  பேசப்படும் மொழிகளில் முதன்மையான மொழி தமிழ்மொழி.இம்மொழியில் பல தரப்பட்ட துறைகளின் கருத்துகள் புதைந்து காணப்படுகின்றன.தமிழ் என்றதும் இலக்கியங்கள்தான் உள்ளன என்றும்,பண்பாட்டினைப் போதிக்கும் மொழியாக மட்டும்தான் இருக்கிறது என்பதும் அனைவரின்  கருத்தாக இருக்கிறது. ஆனால் ஆய்வுநோக்கில் பார்க்கும்போது மருத்துவம்,அறிவியல்,புவியியல்,வானியல்,உலோகவியல் தொடர்பான பல செய்திகள் காணப்படுகின்றன.
இன்றைய தட்பவெப்ப மாறுபாட்டினால் பலவிதமான மாற்றங்கள் புவியில் ஏற்படுகின்றன.இதனால், நூல் வடிவிலோ,சுவடிகள் வடிவிலோ,நடுகற்கள்,கல்வெட்டுகள் போன்றவற்றையோ காப்பது மிகவும் அவசியமாகிறது. இவை குறித்து பல்வேறுவிதமான ஆராய்ச்சிகள் உலகளவில் நடைபெற்று ஆய்வுக்கட்டுரைகளும்,ஆராய்ச்சி ஏடுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.ஆனால், அவை அனைத்தும் தனித்தனியே இருக்கிறதே தவிர ஒருங்குபடுத்தி ஒரே இடத்தில் அமைக்கப்படவில்லை.எனவே தமக்குக்கிடைக்கும் குறிப்புகள்,புத்தகங்கள்,இதர செய்திகள்,ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வது நன்மையானது.இவ்வாறு செய்வது வருங்காலத் தலைமுறையினருக்கு மிகவும் நன்மை அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக