புதன், 11 நவம்பர், 2015

கொரிய ராணி

http;//maruthutv.com
அது கி. பி. 48ஆம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அப்படியே. பெற்றோரும் காதலுக்குச் சம்மதிக்க, இளவரசி மரக்கலத்தில் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரியாவையும், கூடவே இளவரசன் சுரோவையும் அடைந்தாள். சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 12 வாரிசுகள். அரசி இறக்கும்போது தங்கள் குழந்தைகளுடம் அம்மா, அப்பாஎன்று உச்சரித்துவிட்டு இறக்கிறாள். அந்த அரசியின் பெயர்தான் ஹியோ ஹவாங் ஓக்கே. இது கொரிய வரலாற்றுக் கதை. 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் மூன்று பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான சாம்குக் யுசா’ (SAMGUK YUSA) இதை விவரிக்கிறது. கொரிய மக்கள் இன்றைக்கும் அரசியைத் தெய்வமாக வழிபடுகின்றனர். தென்கொரியாவின் ஜிம்குகுவான் காயா என்னும் ஊரில் ராணியின் சமாதி மற்றும் சிலைகள் இருக்கின்றன.


மணிமண்டபம் கட்ட மத்திய அரசு திட்டம்!


ராணி இந்தியாவிலிருந்து கிளம்பிய இடம் அயுத்தஅல்லது ஆயித்தஎன்று கருத்தப்படுகிறது. அதனால், அனேக தற்காலத் தரவுகள் அதை அயோத்திஎன்றே புரிந்துகொண்டு பதிவு செய்துள்ளன. சமீபத்தில் ராணியைப் போற்றும் வகையில் மத்திய அரசும் தென்கொரியத் தூதரகமும் இணைந்து அயோத்தியில் ராணிக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக