புதன், 11 நவம்பர், 2015

கொரியாவில் பாண்டியர் வம்சம்.

வரலாற்று சுவடுகள்-கொரியாவில் பாண்டியர் வம்சம்.

 வரலாற்று சுவடுகள்-கொரியாவில் பாண்டியர் வம்சம்.
MODELகாலச்சக்கரத்தில் ஏறி கிபி 48ம் ஆண்டுக்கு பயணிப்போம். கிபி 48ம் ஆண்டு கொரியாவை கயா எனும் அரசு ஆண்டுவருகிறது. அதன் வலிமையான அரசன் சுரோ.
இந்தியாவில் உள்ள அயோத்தி நகரின் அரசகுமாரி ஹியோ ஹ்வாங்-ஓக் (கொரிய உச்சரிப்பு. மூலம் என்னவென யாருக்கும் தெரியாது). கொரிய மொழியில் அதன் பெயர் மஞ்சள் ஜேட். நாம் செம்பவழம் என வைத்துக்கொள்வோம்.
அயோத்தி மாநகர் இளவரசி செம்பவழத்தின் கனவில் சுரோ மன்னன் வருகிறான். இளவரசி அவனையே மணக்க விரும்பி பெற்றோரிடம் அனுமதி பெற்று கப்பலில் ஏறி பயணித்து கொரியா செல்கிறார். மன்ன சுரோவை மணந்து பத்து குழந்தைகளை ஈனுகிறார். அந்த பத்து குழந்தைகளும் கொரியாவின் மிக வலிமையான பத்து வம்சாவளியாக உருவெடுக்கிறார்கள். இன்றைய வட, தென் கொரிய அதிபர்கள் இருவரும், மற்றும் மிக வலிமையான கொரியாவின் கிம் வம்சாவளி உள்பட சுமார் ஆறுகோடி பேர் இளவரசி செம்பவழத்தின் வம்சாவளியாக கருதபடுகிறார்கள்.
இளவரசி செம்பவழம் தான் கொரியாவுக்கு முதன் முதலாக தேயிலைச்செடியை கொண்டுவந்தவர் என்றும் கருதப்படுகிறது.
செம்பவழத்தின் சமாதி இன்னமும் கொரியாவில் உள்ளது. செம்பவழத்தின் கதை கொரியாவின் தொன்மையான நூலான சம்யுக் யுஸாவில் விவரிக்கபடுகிறது. இது பழங்கால தொன்மம் என கொரியர்கள் அலட்சியமாக இதை கண்டுகொள்ளாமல் இருந்தாலும் சமீபத்தில் அந்த சமாதியை தோண்டி டி.என்.ஏவை எடுத்து ஆராய்ந்ததில் அது நிஜமான இந்திய டிஎன்.ஏ என்பதும் அயோத்தியில் தற்போது உள்ள அரச வம்சத்தின் டி என் ஏவுடன் ஒத்துபோவது தெரியவந்ததும் பரபரப்பு கூடியது.
கொரியாவெங்கும் இளவரசி செம்பவழம் பிரபலமானார். அவரைப்பற்றிய டிவி சீரியல் ஒன்றும் கொரியாவில் எடுக்கப்பட்டது.
ஆனால் உடனே வரலாற்று ரீதியான சர்ச்சைகள் துவங்கின. அயோத்தியில் இருந்து சம்பந்தமே இல்லாத கொரியாவுக்கு கடலில் எப்படிபோனார் இளவரசி என்பது ஒரு சர்ச்சை, அடுத்த கேள்வி தாய்லாந்தில் இன்னொரு அயோத்தி உள்ளது. தாய்லாந்து அயோத்தி இளவரசியா இவர்?” என இன்னொரு சர்ச்சை.
இரண்டவது கேள்வி எளிதில் மறுக்கபட்டுவிட்டது. கிபி 48ல் தாய்லாந்தில் அயோத்தி நகர் இல்லை. அது பிற்காலத்தில் உருவானது. ஆக செம்பவழம் இந்தியாவின் அயோத்தியின் இளவரசி. ஆனால் இவர் எப்படி கொரியா போனார்?
கொரிய பேராசிரியர் ஒருவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் கூறுவது என்னவெனில் அயோத்தியில் ஒரு உள்நாட்டு போர் நடந்தது. அயோத்தி அரசவம்சம் தன் குடும்பத்துடன் இமயமலை வழியே சீனாவுக்கு தப்பி ஓடியது. சீனாவில் இளவரசி செம்பவழம் பிறக்கிறார். அரசவம்ச மணமகள் வேண்டுமென சொல்லி கொரியர்கள் நாலாபக்கமும் ஆட்களை அனுப்பி தேடுகையில் இளவரசி செம்பவழத்தை கொரியாவுக்கு அனுப்புகிறார்கள்.
சீனாவில் இருந்த ஒரு துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் ஏறி கொரியாவுக்கு சென்று இறங்குகி மன்னன் சுரோவை மணக்கிறார் செம்பவழம்.இளவரசின் சமாதியில் உள்ள இரட்டைமீன்கள் சின்னம் இன்றைய அயோத்தி அரசவம்சத்தின் சின்னமே என்பதும் அதிசியக்கதக்க ஒற்றுமையாக உள்ளது.
இந்த ஆய்வுகள் வெளிவந்ததும் அயோத்தி கொரியர்களின் ஆன்மிக திருத்தலமாக மாறி உள்ளது. அயோத்தி அரசவம்சத்துக்கு பல கொரியர்கள் கடிதம் எழுதி அன்பை தெரிவித்து வருகிறார்கள். இந்திய தூதரகமும், கொரிய தூதரகமும் இந்த உறவை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதற்கு நடுவே இளவரசி செம்பவழம் பாண்டியநாட்டு பேரரசி என்றும் இன்னொரு புதுக்கோணம் எழுப்பட்டுள்ளது. பாண்டியநாட்டு சின்னம் மீன் என்பதை அறிவோம். ஆனால் அது இரட்டை மீன் என்பதை அறியமாட்டோம். ஆம் பண்டைய பாண்டியரின் சின்னம் இரட்டை மீன் கொடியே.
கடலே இல்லாத அயோத்தியில் இருந்து கொரியா போனார் என்பதை விட வணிகதொடர்புகள் நிரம்பிய பாண்டியநாட்டில் இருந்து சென்றவர் இளவரசி செம்பவழம் எனச்சொல்லுவது பொருத்தமாக இருக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக