வெள்ளி, 13 நவம்பர், 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம்

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I

காமாட்சியம்மன் கோயில் 

அமைவிடம்
தெரு                         : மேட்டு தெரு, நகர பேருந்து அருகில்
ஊர்                            : காஞ்சீவரம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்

பௌத்த அடையாளங்கள் 
1.                   பகவன் புத்தர் சிலைகள்
2.                   போதிசத்துவர் சிலைகள் 
3.                   தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை 
4.                   கல்வெட்டு

01. பகவன் புத்தர் சிலைகள்
1.                   சென்னை அரசு அருங்காட்சியகம்
2.                   அரசு கா. மு. சுப்புராயர் உயர்நிலைப்பள்ளி
3.                   கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோவில் 
4.                   காணாமல் போன சிலைகள்
5.                   கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபம்
02. போதிசத்துவர் சிலைகள்
1.                   கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் உள்ள சிற்பங்கள்
2.                   கோவிலின் குளக்கரை அருகில் உள்ள 4கால் மண்டபத்தில் உள்ள சிற்பம். 
3.                   கிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயக்கீரிவர் சிலை
4.                   கோயிலின் மானஸ்தம்பத்தின் உச்சியில் பிரம்ம தேவயச்சன் என்ற சாத்தான்  
03. தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை
1.                   புதலதிச (Pu ta la ti sa) என்ற பானை ஓடு 
2.                   புத்த தூபி
3.                   உஜ்ஜைன் சின்னம் பொரித்த நாணயங்கள்
4.                   நாணயங்கள்
04. கல்வெட்டு
1.                   மெய் சாத்தான் கல்வெட்டு
01.1 சென்னை அரசு அருங்காட்சியகம்,  எழும்பூர்சென்னை    
தொல்பொருள் கண்காணிப்பாளர் (Superintendent of Archaeology) T A கோபிநாத ராவ்  அவர்கள் 1915 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே நின்ற நிலையில் இருந்த புத்தர் சிலையை கண்டறிந்தார். இந்த புத்தர் சிலைக்கு 'சாஸ்தா' என்று பெயர். புத்தர் இருந்த இடத்தில் ஐயப்பன் உருவத்தைப் புத்தம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலை இச்சிலையே. இச்சிலை தற்பொழுது சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.

'
சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று. சாத்தன் என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் புத்தர் என்பதால் அப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சாஸ்தா என்பது புத்தரை குறிப்பது என்பதற்கான பல ஆதாரங்கள் பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள்  என்ற நூலிலும் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்களின் நூலிலும் காணலாம். சாத்தான் குட்டை தெரு என்று வழங்கப்படும் தெரு புத்தர் பெருமானை குறிப்பது,  சாத்தான் என்பது சாஸ்தா என்பதன் மருவு  என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு"  என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம். 
சிலையமைப்பு
கைகள்  இரு கரங்களும் உடைந்த நிலையில் உள்ளது* கால் நின்ற நிலை (சமநிற்கை) ஞானமுடி ஞான முடி காணப்படவில்லை, உடைக்கப்பட்டு இருக்கலாம் தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்றுசீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 7’ 10" அடி   நூற்றாண்டு  கி.பி 6ஆம் நூற்றாண்டு **2  அரசு பல்லவ கால சிற்பம். மூக்கு உடைந்த நிலையில் உள்ளது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-g7kY-9rLVW-7mUpmu34tB4Hzm_q_thwSahyphenhyphenRsQmp1qM0xHMm3UJJ1vXtKk7WqfIqSObTxtmJ2a5wuTQXPI3v7V-DcynYN8dgU6uEu_ciWuTmBn6-Yu7pOGRGq14ApJcxPJNGLFPHqXYQ/s640/Sastha.jpg

குறிப்புகள் 
டி. ஏ. கோபிநாதராவ்
01. *
வலது கை காக்கும் கை முத்திரையுடனும் (Abhaya Mudra) இடது கை தானம் ஏற்கும் பாத்திரத்துடன் இருக்கலாம் என்றுரைக்கிறார்.

02. **
இந்த சிலை எந்த நூற்றாண்டுக்கு உரியது என்றுரைக்கவில்லை. அமராவதி சிலைகளின் தனிசிறப்புகளுடன் (Features) ஒப்பிட்டு இந்த சிலை ஆறாம் நூற்றாண்டுக்குரியது என கணிக்கப்பட்டுள்ளது.

03.
இக்கோயில் பௌத்த பெண் தெய்வமான தாராவின் கோயிலாக இருந்து பின்பு மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் டி. ஏ. கோபிநாதராவ்.

01.2 
அரசு கா. மு. சுப்புராயர் உயர்நிலைப்பள்ளி
அமைவிடம்
தெரு                   : சுப்பிரமணி முதலி தெரு,காமாட்சியம்மன் கோயில்  அருகில்  
ஊர்                      : காஞ்சீவரம்
வட்டம்              : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்       : காஞ்சீவரம் மாவட்டம்

கோவிலின் தோட்டத்தில் இருந்த இந்த புத்தர் சிலையை கோவிலின் அருகில் அமைந்துள்ள பள்ளி வளாகத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி  அவர்களின் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் காமாட்சியம்மன் கோவிலின் தோட்டத்தில் இருந்த புத்தர் சிலை என்று குறிப்பிட்டுள்ள படத்திலிருந்து இதனை உறுதி செய்யலாம்.http://www.ambedkar.in/ambedkar/subPage.php?articleId=79&categoryId=13 ( பார்க்க  பக்கம் 5 படம் 7 )

பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான வசந்த மண்டபத்தில் இருந்த இந்த புத்தர் சிலையை பள்ளி வளாகத்திற்க்கு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுகிறார் அறிஞர் Dr K சிவராமலிங்கம் (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu). மேலும் இந்த மண்டபம் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றும் அதன் அடிப்படையை (Foundation) அமைக்கும் பொழுது நின்ற கோலம் கொண்ட புத்தர் சிலைகள் காணப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம். பழமையான வசந்த மண்டபம் தற்பொழுது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இங்கு அருகில் உள்ள வைதிகர்கள் பகவன் புத்தர் சிலையின் முகத்தில் எண்ணெய் தேய்த்தும், தலை சுருள் முடியில் சந்தனம் இட்டும், கழுத்து வரை காவி உடை அணிவித்தும் வருகின்றனர். இச்சிலையை காணப்போகும் பௌத்தர்கள், காவி உடையை அவிழ்த்து விட்டு வருகின்றனர். எனவே பகவன் புத்தர் சிலையின்  முகம் மட்டும் மிக கருமையாக காணப்படுகிறது. 

சிலையமைப்பு
கை  சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி  தீப்பிழம்பாகதலைமுடி சுருள் சுருளான முடிகள்  கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடைஇடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது  சிலை உயரம் 5 1/2  அடி உயரம்  நூற்றாண்டு கி.பி 7ஆம்  நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUats_f9FXxMwTX2nNoMvY3lWO9EfwzOCK8eAB9QiUSLS3w458sKRVZ99U9OGB3nKCwyibrG-idEJuBPF77VSILkiGi5oWDt5TrSRqbIGC8J-5h2fQX-e2VLzzbN8NUeqOeIFdm9N823sn/s640/Kanchi+Subramanimudali+school.jpg


01.3 கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோவில்
விரிவாக பார்க்க http://elambodhi.blogspot.in/2015/11/ii.html

01.4
காணாமல் போன (அ) அழிக்கப்பட்ட சிலைகள்
01. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது காணப்படவில்லை என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி  அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில். நின்ற நிலை, இருந்த நிலை (அமர்ந்த) மற்றும் கிடந்த நிலை (பரிநிர்வாண) என மூன்று  நிலைகளிலும்  இங்கு புத்தர் சிலை இருந்தது என பலர் கூறுகின்றனர். பின்னர் பெருமாள் நின்ற நிலை, இருந்த நிலை மற்றும் கிடந்த நிலையாக மாற்றப்பட்டுள்ளது.     
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHnna1LhWPHACOApv875GuwMLo-cGiC4Eb_3cTmsnd85h684vZaROgLyoJp_Xcu0NqNSTWRMHmsC3vSwS3vsrpDX_Fp_RMt0BQzLkEJQjHlR-i1VtvsTiU3qG4m0lr3l8uAhueMcxElV78/s640/KMT17+011115.jpg

02. தோட்டத்தில் உள்ள மண்டபத்தை கட்டிய பொழுது இத்தோட்டத்தில் இருந்த புத்த உருவங்களையும் அதன் அடியில் புதைத்துவிட்டனர் என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில். 

03.இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை  என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில். 

04. அமர்ந்த நிலையில் அமைந்திருந்த புத்தர் சிலையை ஒன்றை  T A கோபிநாத ராவ்  அவர்கள் பார்த்திருந்தார். கோவிலின் வடக்கு கோபுரம் அருகில் கவனிக்கப்படாத நிலையில் புத்தர் சிலை கீழ் பகுதி மட்டும் இருந்தது. அந்த சிலையும் மிக மோசமாக சேதமடைந்து இருந்ததாக குறிப்பிடுகிறார்  அறிஞர் Dr K சிவராமலிங்கம் ( Archaeological Atlas of the Antique Remains of Buddhism in Tamilnadu)

05.
கல்யாண மண்டபத்திற்கு அருகில் உள்ள கோவிலில் தலை மட்டும் உள்ள சிலை இருந்தது.
01.5 கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் லோகநாதர் சிலைக்கு மேல் உள்ள புடைப்பு சிற்பம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKm1ZUXFMwULccBvmkIXoKoS8S330JpX5IH-TKKZK0VkK2iD_a6NhADpEIH7CQS0y6jXf2YqPHMKgM5hcf9O1dsYHy0dXr_Zn_zZ3gP5k26VTtxVoRv_RuRHNFyZolUpk_jQQQt4l6_WZh/s400/kamatchi+ammam+pillar.JPG

02.1 கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் உள்ள  புடைப்பு சிற்பங்கள்

இந்திய தொல் பொருள் ஆய்வு அறிஞர் Dr.K.R வெங்கடராமன் பொது அறிவுறுத்தல்கள் மற்றும் வரலாற்று பதிவு இயக்குனர் 1973ஆம் ஆண்டு எழுதிய    "தேவி காமாட்சி" என்ற  தம் நூலில் குறிப்பிடுவது
·                     காமாட்சியம்மன் கோயில் மண்டபம் தூண் மீது மானஸ்தம்பத்தின் அருகில்   தாராதேவி உருவம் காணப்படுகின்றன. சில தூண்களில் தாரா தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 
·                     கிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயகீரிவர் (Hayagriva) உருவமும் காணப்படுகிறது.
·                     எங்கே தாரா தேவியும் ஹயக்கீரிவரும் காணப்படுகின்றனரோ அங்கே லோகநாதர் காணப்படுவார். அங்கே  சிதைந்து  காணப்படும் சிலை லோகநாதர் சிற்பமாக இருக்கவேண்டும்.
·                     கோயிலின் மானஸ்தம்பத்தின் உச்சியில் பிரம்ம தேவயச்சன் என்ற சாத்தானின் உருவம் பொறிக்கப்படிருக்கிறது 

யாசக மண்டபம் 
நீளவாக்கில் 6 தூண்கள் அகலவாக்கில் 4 தூண்கள் ஆக 24 தூண்களை கொண்டுள்ளது இம்மண்டபம். மிக பழமையான நான்கு தூண்களில் பௌத்த சிற்பங்கள் காணப்படுகிறது. தாரா தேவி அதாவது மணிமேகலை சிற்பங்களை சிலர் புத்தர் சிலை என்று தவறாக கருதுகின்றனர். சிந்தனை கை மற்றும் தாமரை அமர்வில் சிற்பங்கள் இருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர். மார்பக பகுதி, இடுப்பு பகுதி மற்றும் அணிந்திருக்கும் அணிகலன்கள் அச்சிலைகள் புத்தர் சிலை அல்ல மாறாக மணிமேகலை சிற்பம் என்ற உறுதிக்கு வரமுடியும்.        
சிதைந்து  காணப்படும் லோகநாதர் சிலை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhowd5l4dxjQw897EDEZbMTTFqJ2H83ygqadVuJPhJ0gxiWbN0v7CFmY-58-NRJj9RSONc6naiH4DxubE_mjMlcWecw32oXM-yBcrheifyatto0DFzYiuHCTsf7h8TIAUSWAA_n8_IVlOZY/s640/Kamatchi+Amman+kovil+04.jpg

யாசக மண்டப தூண் மீது காணப்படும் தாராதேவி என்ற மணிமேகலை சிற்பங்கள்  
https://drive.google.com/folderview?id=0B2WMRIF-1cD3ZVBiYzVlbmljT0k&usp=sharing
02.2 கோவிலின் குளக்கரை அருகில் உள்ள 4கால் மண்டபத்தில் உள்ள சிற்பம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-MfgCWhHD51r5_2ZAphZ8E5-zS5K5PlB-Gw3JM7BEQpu8mvavx6mpS4GIIy8SChJ9lCtpg-poFVEXJm9j4FDFhti0529lwj5Z1XHBDc1OvSFXnl_udbP_RLApbGLA_fy5chr2IRuggK8t/s640/KMT36+011115.jpg
02.3 கிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயக்கீரிவர் சிலை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji2BRXenQyp6ok717-IkHyxF_MKcPR2LCRNPaODT0vz9S3RtxCKiWTJsVsVsZ0NAqFNl83tm6t7wdzJVSpFquXUVO0HWSz2UvFyNq2y10hy1HdO4FMoPIXwzEZLrdXaGlITEfbt-Fh2HJD/s640/KMT41+011115.jpg


03.
தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை
ஆண்டு: 1962-63 அறிஞர்: Dr.R. சுப்ரமண்யம் அமைப்பு:இந்தியத் தொல்லியல் ஆய்வு தெற்கு வட்டம் இடம்  :காஞ்சி காமகோடி, காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சி காமகோடி மடவளாகத்தில் மாதிரி குழிகள் வெட்டி அகழ்வாய்வு மேற்கொண்டார். 4.8 மீட்டர் அழம் வரை அகழாய்வு குழிகள் வெட்டப்பட்டது.
·                     ஏறத்தாழ ஐம்பது கூம்பு வடிவ சட்டிகள்
·                     உஜ்ஜெயின் சின்னம் உள்ள செம்பு காசு  
·                     கி.பி 2 ஆம் நூற்றாண்டை சார்ந்த சாதவாகன செப்பு நாணயங்கள் (Copper Coin). அவற்றில் ஒன்று தெளிவாக 'ருத்ர சதர்கனி பெயரை தாங்கி இருந்தது. Indian Archealogy a Review 1962-63 Page no 12

சாதவாகனர் காசுகள் கண்டறியப்பட்டிருப்பது காஞ்சியில் பல்லவர் எழுச்சிக்கு முன்னீடாக கி.பி.1 ஆம் மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சிபுரத்தில் சாதவாகனரின் அரசியல் தாக்குரவின் தாக்கத்திற்கும் தொடர்பிற்கும் சான்றுரைக்கின்றன. பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு).

ஆண்டு: 1969-70 அமைப்பு: சென்னை பல்கலைக்கழகம் துறை பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை இடம் : 01. காமாட்சி அம்மன் கோவில் 02. ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடம். காமாட்சி அம்மன் கோவில் அருகில் (KCM-1) ஒரு அகழாய்வு குழியும் எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் (KCM-2, KCM-3 & KCM-4) மூன்று அகழாய்வு குழிகள் வெட்டப்பட்டது. நான்கு அகழாய்வு குழிகள் ஆறு மீட்டர் அழம் வரை வெட்டப்பட்டது.
·                     புதலதிச (Pu ta la ti sa) என்ற ஐந்து பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சாம்பல் நிறப்பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இதில் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் கி.பி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் காணப்படுகின்றது. "புதலதிச" என்பது ஒரு பௌத்த துறவியின் பெயராக இருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது. KCM-1
·                     கீழ் மண்ணடுக்கில் காணப்பட்ட கட்டட செங்கற்கள் புத்த விகாரையின் கட்டடப்பகுதியின் செங்கற்களாக இருத்தல் வேண்டும் என்று கண்டறிந்தனர்.
·                     அங்கு கிடைத்த வட்ட வடிவமான ஒரு கட்டிடப்பகுதியின்    எஞ்சிய பகுதியாகும். இப்பகுதி புத்த தூபியின்   அடிப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.


ஆண்டு: 1970-71 அமைப்பு: சென்னை பல்கலைக்கழகம் அறிஞர் பேராசிரியர் T.V. மகாலிங்கம் இடம் :காமாட்சி அம்மன் கோவில்.  பேராசிரியர் T.V. மகாலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் படி Dr.G. கிருஷ்ணமூர்த்தி A.சுவாமி மற்றும் S. குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் அகழாய்வு செய்தனர். மூன்று அகழாய்வு குழிகள் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் வெட்டப்பட்டது. KCM ???. பல பௌத்த ஸ்துபங்கள் காஞ்சிவரத்தில் கட்டபட்டு இருந்ததர்க்கான மேலும் ஆதாரங்களை இந்த அகழாய்வு அளித்தது. இந்த அகழாய்வின் பொது பல்வேறு பொருள்கள் கண்டறிய பட்டது. அவைகள்
01.
ஓடுகள்
02.
சுடுமண் மனித சிலைகள் (Terracotta human figurines)
03.
விரிவான தலை பாகை (Elaborate headdress)
04.
மூன்று நாணய அச்சுகள்
05.
உஜ்ஜைன் சின்னம்
06.
நான்கு தாயத்துக்கள் (Four amulets)
07.
சிப்பி வளையல்கள்,
08.
இரட்டை மீன் மற்றும் உஜ்ஜைன் சின்னம்* பொரித்த நாணயங்கள் கண்டுபிடிப்பு சாதவாகனர்களின் செல்வாக்கை குறிக்கிறது. 
09. 
இஸ்துப கட்டடமைப்பு
உஜ்ஜைன் சின்னம்* - உஜ்ஜைன் என்ற இடமானது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ளது. மல்வா மாவட்டத்தின் கசிப்ரா   ஆற்றங்கரையில் உஜ்ஜைன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில்  அகழ்வாராய்சி செய்து வந்த சுன்னின்காம் (A.Chunningham) என்பவர் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையில் ஆனா அடையாளத்தை அடையாளப்படுத்த முடியாததால் உஜ்ஜைன் அடையாளம் என்றார். அன்று முதல் உஜ்ஜைன் அடையாளம் என்று அழைக்கப்படுகிறது. உஜ்ஜைன் அடையாளம் என்பது நாணயத்தின் தலை பகுதியில் நான்கு வட்டமும் நாணயத்தின் மறுபக்கத்தில் கீழ்காணும் ஒரு விலங்கு அல்லது மனிதன் காணப்படுவார்

நான்கு விலங்குகள்
01.
யானை
02.
காளை
03.
குதிரை
04.
சிங்கம் 

இந்த நான்கு விலங்குகளும் பகவன் புத்தரின் வாழ்கையோடு தொடர்புடையது. பகவன் புத்தரின் பிறப்பை உணர்த்தும் நினைவுச்சின்னம் யானை, இல்லற வாழ்வை உணர்த்தும் நினைவுச்சின்னம் காளை, பெருந்துறவை உணர்த்தும் நினைவுச்சின்னம் குதிரை, பேருரையை உணர்த்தும் நினைவுச்சின்னம்  சிங்கம். புத்த தூபியில் உள்ள நான்கு சிங்கங்களுக்கு கீழ் இந்த நான்கு விலங்குகளும் பொறிக்கப்பட்டிருக்கும் (Lion Capital). 

நாணயத்தின் மறுபக்கத்தில் காணப்படும் மனிதன் பகவன் புத்தராக இருக்க வாய்ப்பில்லை அந்த உருவம் அரசனாக இருக்கலாம். உஜ்ஜைன் சின்னம் எனப்படும் நான்கு வட்டம் நான்கு பெரும் உண்மைகளை குறிப்பிடுகிறது.


09.
எஞ்சியுள்ள இஸ்துப கட்டடமைப்பு கண்டறியப்பட்டது. இந்த அமைப்பு நான்கு வரிசையிலான செங்கற்கள் படிப்புகள் கொண்டிருந்தது. கீழ் இரு வரிசை படிப்புகளில் உள்ள செங்கற்கள் வட்டத்தின் ஒரு பகுதியை உருவாக்குகிறது. மேல் இரு வரிசை நீண்ட செவ்வக அமைப்பில் படிப்புகளில் உள்ள செங்கற்கள் நேராக செல்கின்றது. இந்த இஸ்துப அமைப்பு கி. மு 2-1 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. ஒரு வரிசையில் உள்ள தூண் துளைகள் இங்கு கூரை அமைப்பு  இருந்தமைக்கான சான்றாக அமைகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuVe92XJhBBGcmv7U9-Y5IQUOUSojQOP594vHp3wbr1Hau_ivBalnyKeFWkCS4b-e4TFtgyrLulieimGGlJ8qvBkYiw_0hIGFD2BTx3iAZ2YvOe5jmr4406xLe8UVcRf19HVliSidv6Hdh/s640/Kanchi+Stupa+found+1970-71.jpg

ஆண்டு 1971-72 அமைப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிஞர்Dr.C.கிருஷ்ணமுர்த்தி இடம் காமாட்சி அம்மன் கோவில். Dr.C.கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி A.சுவாமி மற்றும் S. குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்தனர். இங்கு
·                     செங்கற்கள் கட்டிட எச்சம் முழுவதும் காணப்பட்டது.
·                     இருவரிசை சுவர்களை கொண்டிருந்தது. 
·                     வடக்கிலிருந்து தெற்கில் செல்லும் சுவர்களாக அமைந்திருந்தது
·                     மேல் சுவர் (56x23x8 cm) நேராகவும், கீழ் சுவர் (40x18x6 cm) வளைகோடாக வட்டத்தை உருவாக்கும் திட்டத்துடன் அமைந்திருந்தது. (பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டிடப்பகுதி)
·                     மற்றொரு சுவர் சுமார் ஒரு மீட்டர் அளவில் காணப்பட்டது
·                     இச்சுவர்களை சுற்றிலும் ஏராளமான தூண்கள் நடப்பட்டு இருந்ததற்கான குழிகள் காணப்பட்டன. இக்குழிகள் மண்ணாலும் சாம்பலாமும் நிரப்பப்பட்டிருந்தன.
·                     அத்துறையினர் இப்பகுதி தீயினால் அழிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதிகின்றனர்.
·                     இந்த அகழ் ஆய்வின் பொது பல்வேறு பொருள்கள கண்டறிய பட்டது. அவைகள் பானைகள், பிராமி எழுத்துடன் கூடிய ஓடுகள், சாதவாகனர் காலத்திய சுடுமண் நாணய அச்சு, அம்பு தலைகள், சிப்பி வளையல்கள் etc (01/55-56) Indian Archaeology 1971-72 A Reviwe Page no 43

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரகாரத்தின் மேற்குச்சுவரில் ஒரு சிறிய சன்னதி அருகில் அடியார்க்கு நல்லாரின் மேற்கோள் பாடலும் விளக்கமும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. 

மேற்கோள் பாடல்
"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு" 

எழுதி வைக்கப்பட்டிருக்கும்  பாடல் விளக்கம்
காஞ்சிபுரத்திலுள்ள வளையளை கையிலலிந்த காமாட்சியம்மன் கோவிலில் காவல் புரியும் மகிழ்ச்சி மிக்க சாத்தானின் (ஐயனாரின்) கையிலிருக்கும் செண்டயுதத்தை பெற்றுக்கொண்டு கரிகாற் சோழன் இமய மலையில் தனது வெற்றி அடையாளத்தைப் பொறித்தான்.

மேற்கோள் பாடல் குறிப்பு
நூல் : சிலப்பதிகாரம்
காண்டம்: புகார்க்காண்டம்
காதை : இந்திர விழவு ஊர் எடுத்த காதை
வரி எண் : 53-58
உரை ஆசிரியர் : அடியார்க்கு நல்லார்

இப்பாடல் கச்சியில் இருந்த காமக் கோட்டத்தில் மெய்சாத்தான் காவல் இருந்ததை கூறுகின்றதுtp://elambodhi.blogspot.in/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக