Monday, 10 August 2015

mayan

அழித்தொழிக்கப்பட்ட தமிழன் - மாயன்
மாயன் – திரைப்படம் 
சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது ஒரு திரைப்படம். “அபோகலிப்டோ”  மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன் நடந்த சம்பவங்களைக் கோடிட்டு காட்டுவதாக கூறி இப்படி காட்சிப்படுத்தியது
“அழிவின் விளிம்பில் இருந்த அந்த  சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுகிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் ஸ்பானிய கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து அந்த  காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கிறது.”
அந்த காட்டுமிராண்டிகளின் கதை..
பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை.
நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடைய வில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக் கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.
மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்த்து? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? அந்த மர்ம நகரத்தினில் டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அமைக்கப்பட்டது எவ்வாறு? மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்தது, அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளது ஆச்சரியமிக்கவை.
பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு இருந்தது. அந்த இடத்தில  மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான ஜான்  லொயட் ஸ்டீபன்  தான் கேட்பாரற்று பாழடைந்த பழமைமிக்கதான் அந்த  நகர பகுதியை முதலில் கண்டுபிடித்தார்.
மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகி,  பலப் பல துறைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளராத காலத்தில் நடந்தவை.
ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரே வியப்பு. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்துவிட்டு  பின்னர் எதற்காக அதைவிட்டு எங்கே போய் மறைந்தார்கள்.
19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டும்  20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது. 1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பு, பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்ட சோக வரலாறு  தெரிந்து கொள்ள முடிந்தது.
பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் மாயா அரசுகள் இருந்த யுகாடான் தீபகற்பம் முழுவதும் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ராணுவ ரீதியாகக் கைப்பற்றியது போதாதென்று அடுத்து மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் யுகாடானைக் கைப்பற்ற ஸ்பானிய அரசு யத்தனித்தது. ஸ்பெயினின் முக்கிய மதம் ரோமன் கத்தோலிக்கம்.  புதிய உலகு ராணுவ ரீதியாக   அடக்கப்பட்ட உடனே, கத்தோலிக்க மிஷனரிகள் பைபிளைத் தூக்கி கொண்டு அமெரிக்கக் காடுகளுக்குள் நுழையத் தொடங்கி விட்டார்கள்.....
......
ரோமன் கத்தோலிக்கம் கொள்கை இறுக்கத்தின் உச்சியில் இருந்த காலமது. கி.பி. 1549 ல் மத்திய அமெரிக்காவில் யுகாடானுக்கு வந்து சேர்கிறார். மக்களை கத்தோலிக்கத்துக்கு மாற்றக் கிளம்பிய பாதரியார்களுள் ஒருவரான டியாகோ டி லாண்டா.
யுகாடானுக்கு மூலை முடுக்குக்கெல்லாம் பயணம் செய்தார். மற்ற பாதரியார்கள் போவதற்கு அஞ்சிய பிரதேசங்களுக்கெல்லாம் சென்று கத்தோலிக்கத்தைப் போதித்தார். மாயா மக்கள் தங்கள் பாரம்பரியப் பழக்க வழக்கங்களையும் கடவுள்களையும் விடத் தயாராக இல்லை.  கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கூட கிருத்துவக் கடவுளைத் தங்கள் பாரம்பரியத்துக்கு ஏற்றார் போலத்தான் வழிபட்டனர்.
அனைத்தையும் பறித்துக் கொண்டு  ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும்,  ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம் என்று பூசாரிகள்  ரகசியமாக ஒன்றிணைந்து செயல்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத லாண்டா, பழைய மாயா மதச் சின்னங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கினார். பழைய மாயா மதத்தைப் பின்பற்றுகிறவர்களை  தூக்கிச் சென்று அடித்து உதைத்து  வலி தாங்க முடியாமல்,  “உண்மையான” கிருத்துவனாக இருப்பதாக ஒத்துகொள்ள சொல்வார். அடி விழுந்தும் செய்த “பாவங்களை” உடனே ஒத்துக்கொள்ளாமல், சித்ரவதையின் போதே உயிரை விட்ட நூற்றுக்கணக்கான மாயாக்களும் உண்டு. பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம்
ஒரு புறம் மாயா மக்களுக்கு அடி உதை விழுந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு புறம், மாயாக்களின் பழைய  புத்தகங்களையும்,  வழிப்பாட்டு விக்கிரகங்களையும் எங்கு கண்டாலும் பறித்துவர  வர ஆணையிட்டிருந்தார் லாண்டா.
இப்படிச் பறிக்கப்பட்ட ஆயிரங்கணக்கான  புத்தகங்களும் விக்கிரகங்களும் பொது இடத்தில்  போட்டுக் கொளுத்தப்பட்டது. லாண்டாவின் இந்த செயல்களால் எவ்வளவு மாயா பண்பாட்டுப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன என்று இதுவரை கணக்கிடப்படவில்லை. அந்த மக்களின் விலைமதிக்க முடியாத ஆயிரக்கணக்கான பண்பாட்டு பொக்கிஷங்களையும் புத்தகங்களையும் அழிக்கப்பட்டு கடைசியில் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்தது.
           
அப்போது பிறகு மாயா எழுத்துருவை வாசித்து மொழிக்கு அர்த்தம் சொல்ல ஒரு மாயருக்குக் கூட தெரியவில்லை.
எந்த மக்களை ,எந்த கலாச்சாரத்தை அழிக்கவேண்டும் ,ஒழிக்கவேண்டும் யார் ஆசைப்பட்டாரோ அவரால் தான் இன்று மாயா எழுத்துகளை வாசிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளன. மாயா சமூகத்தைப் பற்றியும் மொழியைப் பற்றியும் அவர் எழுதி வைத்த குறிப்புகள் தான் இன்று மாயா நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்யும் இனவியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் பெரும் துணையாக உள்ளன.
மாயா நாகரிகத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு தான் அவர் மாயா மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதத் தொடங்கினார்.  மாயா நாகரிகம் சாத்தானின் கைவேலை என்பதை ஸ்பானிய மத அதிகாரிகளுக்குப் புரிய வைப்பதற்காகத்தான் அக்குறிப்புகளை அவர் புத்தகமாக்கினார். அவர் விட்டுச் சென்ற குறிப்புகளைக் கொண்டுதான் 20ம் நூற்றாண்டில் மாயா எழுத்துக்களைப் படிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.
கிறிஸ்து பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அமெரிக்கப் பகுதியில் மாயா நாகரிகம் தோன்றி விட்டது. அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மெல்ல வளர்ந்து மெக்சிகோ, குவாத்தமாலா,  ஹொண்டுராஸ் போன்ற பகுதிகளிளை உள்ளடக்கியது அப்பகுதி முழுவதும் மாயா மக்களின் கட்டுப்பாட்டில் வந்தது.  கி.பி. மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டம் மாயா பண்பாட்டின் பொற்காலமென்று அறியப்படுகிறது.
கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. ஒருவகையான மான்தோலில் புத்தகங்களை புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதி பார்த்திருக்கிறார்கள்.
மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.
அவை பெரும்பாழும் வான் ஆராய்ச்சிக்கு பாயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளன. எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது.இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது...
.....
இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும் வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.
பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. சூரியன்,சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர்.
தவிர பூமிக்கடியில் சேமிப்புக் கிடங்கு தோண்டி ,உணவுப் பொருட்களைப் பாதுகாத்தனர். இது பஞ்சகால உணவுத் தட்டுப்பாட்டை நீக்கியது. ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைந்தனர்,சிற்பங்கள் செதுக்கினர், கலைக் கூடங்கள் அமைத்தனர், அணிகலன்கள் உருவாக்கினர். ஓவியங்களில் "டர்கிஷ் ப்ளூ " என்ற நீல வண்ணத்தை அதிகம் உபயோகித்தனர். இதுதான்   ‘மாயன் நீலம்’ இன்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு.. ஏழாம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் 900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்து போனது.  மாயா நகர பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்று கிடந்தது. எங்கு போனார்கள் என்பது இன்றுவரை விடைதெரியா கேள்வி.
          
மாயாக்களின் கலை திறன் மிகவும் நுட்பமானது, சிற்ப கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும்.
இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விஷயம்  மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதான்ங்கள் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில்செதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் நீர் மேலாண்மை அறிவு மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது. தற்போது தென் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குளம் , இதற்கான சான்று. மழைநீர் சேமிப்பு குழாயோடு இணைக்கப்பட்டுள்ளது.
ஓடும் தண்ணீரில் நீரூற்று, கால்வாய் போக்குவரத்து, கழிவு அறை சுத்தம் செய்ய குழாய் அமைப்பு போன்றவை அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளது.  தண்ணீரை அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதன் இயல்பு ஓட்டத்தை தங்களுக்கு ஏற்ற வாறு மாற்றிக் கொண்டுள்ளனர்.
அதற்காகப் பெரிய துளை, பின் அதைச் சிறியதாக மாற்றியது போன்ற கணித அறிவியல் அமைப்புகளும், வட்ட வடிவ கால்வாய் அமைப்பு , நீர் கடத்தியாகச் செயல்பட்டதையும் இன்றளவும் ஆச்சரியங்கள். தண்ணீர் மூலமாக சக்தியை திரட்டி அதைப் பல விதங்களிலும் உபயோகித்தனர். 216 அடி நீள வாய்க்கால், 20 அடி உயர நீர் வீழ்ச்சி , 150 மீ.தூரத்திற்குத் தண்ணீரைக் கடத்தியது , அதை விவசாயத்திற்காக ,பாசன அமைப்பாக மாற்றிக் கொண்டது போன்றவை இவர்களின் அசாத்தியமான நீர் மேலாண்மைத் திறனை வெளிப்படுத்துகிறது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மைகள்.
இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் தான் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது....
.....
கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந்தே அறிவு பெற்றனர் என்கிற கருத்தை முன் வைக்கிறார்.
இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செயப்பவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிகின்றனர்.
மாயன்களின் பிரமிடுகள் தமிழ் கட்டிட கலை,   தமிழக கோயில்களின் வடிவமும் குறிப்பாக தஞ்சை கோயில் வடிவமும் பிரமிடுகளும் ஒத்த வடிவம் கொண்டு உள்ளதை கண்டு புருவம் உயர்த்துகிறார்கள் ஆய்வாளர்கள்.  மேலும் மாயன்களின் நாட்காட்டி கணித முறையும்  தமிழர்களின் திருகணித பஞ்சாங்கமும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது. கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் தமிழர்கள்  மட்டுமல்ல மாயன்களும் கூடத்தான்.
தமிழ் மண்ணில் இருந்த நாகன்களில் சிலரே தமிழ் மண்ணை விட்டு வெளியேறிய மாயன்கள்  என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கைகள்.
மாயன் என்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். அறிவில்  சிறந்தவர்கள். தென் இந்தியர்கள் அல்லது ஈழத்தவர்கள். மாயன் என்கிற கட்டமைப்பளர்கள் கட்டிய நகரமே பொன் இலங்கை என்கிறது பண்டைய ராமாயணம்.
அசுர வழிபாடு செய்யும் மக்களும் இவர்களின் தாய் மண்ணில் வாழ்ந்தாதாக சொல்லபடுகிறது. இந்த மாயன்கள் ஒரு நிலையில் தங்கள் கடல் வழி பயணத்தில் அடைந்த இடம்தான் - மெக்ஸிகோ அல்லது கௌதமால. இது தற்போதைய தென் மற்றும் நடு அமெரிக்க மண்.
இன்றும் இலங்கையில் உள்ள பெயர்கள் மேசிகோவில் உள்ளது என்கிறார்கள். இலங்கை என்பதே பல மெக்ஸிகோ நகர்களின் பெயர்களில் உள்ளதாம். பால் இலங்கை, சிவ இலங்கை என்பது தான் சிலோன் என திரிந்ததாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
அப்போகாளிப்டோவில் காட்டப்படும் பழங்குடியினர் தமிழர்கள்.
அழிக்கப்பட்ட அமெரிக்க பழங்குடியினர் தமிழர்கள். ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வ குடிகளும் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்லுகின்றனர்.
உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு.அழித்தொழிக்கப்பட்ட தமிழன் - மாயன்

உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு.

No comments:

Post a Comment