வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மனுநீதிச் சோழன்

மனுநீதிச் சோழன்அல்லது மனுநீதி கண்ட சோழன்
'கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்நதான்' என்று பழமொழி நானூறு (93) குறிப்பிடுகிறது. 
சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும்  எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன்  பற்றி விரிவாகக் காணப்படுகிறது. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த இராசராசசோழன் உலா, விக்கிரமசோழன் உலா, குலோத்துங்கசோழன் உலா என்பவற்றிலும் மனுநீதிச் சோழன் பற்றி வருகின்றன.

முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த மனுநீதி தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழனின் மனுநீதி பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த தாகும். இக்கதை பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்றிருப்பதைக் காணமுடியும்.

திருவாரூர் தியாகராயர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வடக்குச் சுவரில் உள்ள விக்கிரமச் சோழன் கல்வெட்டில் (தெ.இ.க. 5; 456) மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இக் கல்வெட்டில் மனுநீதிச் சோழனின் அமைச்சனது பெயர், இங்கணாட்டு பாலையூருடையான் உபயகுலாமவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக  மனுநீதிச் சோழனின்அமைச்சனுக்கு ஒரு தெளிவான அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. சேக்கிழார் காலத்துக்குப் பிந்தைய கல்வெட்டு இது.

சோழர் ஆட்சிக்காலத்தி;ல் அரசநீதியாக மனுநீதி விளங்கியது. இதை சோழர்கால மெய்கீர்த்திகள் வாயிலாக அறியலாம். 'மனுவாறு விளங்க', 'மனுநெறி', 'மனுவொழுக்கம்' என்ற சொல்லாட்சி சோழர்கால மெய்கீர்த்திகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பதினொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் (தெ.இ.க III பகுதி 1, 2; 86, 87) மெய்கீர்த்தியாக மனு நீதி முறை வளர மனு நீதி தழைத்தோங்க  என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

செஙகல்பட்டு மாவட்டம் மப்பேடு கிராமத்து சிவன் கோவிலிலும், தஞ்சை மாவட்ட கடம்பவனேசுவரர் கோவிலிலும் மனுநீதிச் சோழன்  தொடர்பான சிற்பங்கள் உள்ளன (தகவல்: முனைவர் வெ. வேதாச்சலம், கல்வெட்டாய்வாளர்).

பெரிய புராணத்தை அதன் மூலத்திலிருந்து விலகாது உரைநடையில் எழுதிய தி. பட்டுசாமி ஓதுவார் (2005; XIII) மனுநீதிச் சோழன் என்ற தலைப்பில்  "இவன், ஏழரான் (ஏழ் 10 ஆரன்ளூ ஏழு மாலைகளை அணிந்தவன்ளூ அல்லது ஏழு அரசரை வென்று சூடிய ஏழு மாலைகளையுடையவன்) என்னும் பெயர் உடையவன்ளூ கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை மீது படையெடுத்து அசேலன் என்பவனை வெற்றி பெற்றவன்."   என்ற குறிப்பை எழுதியுள்ளார். 

பின்னிணைப்பு 1.
குறு நில மன்னர்கள்.
1. அதியமான் நெடுமானஞ்சி புறநானூறு ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 
    பெருஞ்சித்திரனார் 208
2. அதியமான் மகன் பொகுட்டெழினி ஔவையார் 96, 102, 392
3. வேள் பாரி புறநானூறு கபிலர் 105 – 111, 113 – 120, 236 – வேள் பாரியின் பெண்கள் – 112
4. மலையமான் திருமுடிக்காரி புறநானூறு கபிலர் 121 – 124 தேர்வண் மலையன் வடமவண்ணக்கண்
    பெருஞ்சாத்தனார் 125 மாறோக்கத்து நப்பசலையார் 126
5. ஆய் அரண்டின்- புறநானூறு உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை 
    கிழார் 136  குட்டுவன் கீரனார் 240  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
6. நாஞ்சில் வள்ளுவன் புறநானூறு ஒருசிறைப் பெரியனார் 137 மருதன் இளநாகனார் 138, 139 
    ஔவையார் 140 கருவூர் கதப்பிள்ளை 380
7. வையாவிக் கோப்பெரும் பேகன் புறநானூறு பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146 
    பெருங்குன்றூர் கிழார் 147
8.கண்டீரக் கோப் பெருநள்ளி புறநானூறு வன்பரணர் 148-150
9. இளவிச்சிக்கோ புறநானூறு பெருந்தலைச் சாத்தனார் 151
10. வல்வில் ஓரி புறநானூறு வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204
11. கொண்கானங் கிழான்- புறநானூறு- மோசிகீரனார் 154, 155, 156
12. ஏறைக் கோன் புறநானூறு -  குறமகள் இளவெயினி 157
13. குமணன் புறநானூறு பெருஞ்சித்திரனார் 158 – 161, 164, 165
14. இளவெளிமான் புறநானூறு பெருஞ்சித்திரனார் 162, 207, 237, 238
15. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் புறநானூறு ஆவூர் மூலங்
       கிழார் 166
16. சோழன் கடுமான் (ஏனாதி திருக்கிள்ளி) கிள்ளி புறநானூறு கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் 
       மதுரைக் குமரனார் 167
17. பிட்டங் கொற்றன் புறநானூறு கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 168 காவிரிபூம் பட்டினத்துக் 
       காரிக்கண்ணனார் 169, 171 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 170
       வடமண்ணக்கன் தாமோதரனார் 172
18. சிறுகுடி கிழான் பண்ணன் புறநானூறு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 173 – 
       மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 388
19. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் புறநானூறு மாறோக்கத்து நப்பசலையார் 174
20. ஆதனுங்கன் புறநானூறு –  ஆத்திரையனார் 175
21. ஓய்மான் நல்லியக் கோடன் புறநானூறு புறத்திணை நன்னாகனார் 176, 376
22. மல்லி கிழான் காரியாதி புறநானூறு ஆவூர் மூலங்கிழார் 177
23. பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் - புறநானூறு - ஆவூர் மூலங்கிழார் 178
24. நாலை கிழவன் நாகன் புறநானூறு வடநெடுந்தத்தனார் 179
25. ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் புறநானூறு கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
      180
26. வல்லார் கிழான் பண்ணன் புறநானூறு சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார் 181
27. தொண்டைமான் இளந்திரையன் புறநானூறு (sang 185)
28. விச்சிக்கோ புறநானூறு கபிலர் 200
29. இருங்கோவேள் புறநானூறு கபிலர் 201, 202
30. கடிய நெடுவேட்டுவன் புறநானூறு பெருந்தலைச் சாத்தனார் 205
31. மூவன் புறநானூறு பெருந்தலைச் சாத்தனார் 209
32. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி- புறநானூறு அரிசில் கிழார் 230
33. வேள் எவ்வி புறநானூறு வெள்ளெருக்கிலையார் 233, 234
34. நம்பி நெடுஞ்செழியன் புறநானூறு பேரெயின் முறுவலார் 239
35. ஒல்லியூர் கிழான் மகன் பெரும்சாத்தன் புறநானூறு குடவாயிற் தீரத்தனார் 242, விழுத்தண்டினார் 
       243
36. அந்துவன் கீரன் புறநானூறு கரவட்டனார் 359
37. தந்து மாறன் புறநானூறு சங்க வருணர் என்னும் நாகரியர் 360
38. ஓய்மான் வில்லியாதன் புறநானூறு புறத்திணை நன்னாகனார் 379
39. கரும்பனூர் கிழான் புறநானூறு நன்னாகனார் 381, 384
40. கடுந்தேர் அவியன் (name guessed from colophon as per J.R. Marr) – புறநானூறு மாறோக்கத்து 
       நப்பசலையார் 383
41. அம்பர் கிழான் அருவந்தை புறநானூறு கல்லாடனார் 385
42. நல்லேர் முதியன் புறநானூறு கள்ளில் ஆத்திரையனார் 389
43. பொறையாற்றுக் கிழான் புறநானூறு கல்லாடனார் 391
44. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் புறநானூறு கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 
       394
45. சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் புறநானூறு மதுரை நக்கீரர் 395
46. வாட்டாற்று எழினியாதன் புறநானூறு மாங்குடி கிழார் 396
47. தாமான் தோன்றிக்கோன் புறநானூறு ஐயூற் முடவனார் 399

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக