வெள்ளி, 17 அக்டோபர், 2014

ஆதிச்சநல்லூர் - சிந்துசமவெளி நாகரிகம்

பெரியார் திடலில் நடைபெற்ற ஆராய்ச்சி கருத்தரங்கில் விளக்கம்


வரலாற்றுப் பயணத்தில் இரண்டு முக்கிமான வைகள் 1. மனிதன் விட்டுச் சென்ற தன் வரலாற்றுச் சான்றுகள், 2. முதன்முதலாக எழுத்தோடு தமிழர் களின் பண்பாடு பயணித்த காலம், சங்க காலம் என்பதை தொடக்கமாகக் கூறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சிறீவைகுண்டம் அரு கில் உள்ள ஆதிச்சநல்லூர், வேலூர், கோவை ஆனைமலை ஆகிய மூன்று இடங்களில் அகழ் வாய்வில் கிடைத்த செப்பு வாள்களும், மொகஞ் சதாரோ ஹரப்பாவில் கிடைத்த செப்பு வாள்களும் தமிழர்களுடைய ஒத்த நாகரிகத்தையும் தமிழர்கள் 5000 ஆண்டு கால பாரம்பரியம்மிக்கவர்கள் என்பதை உறுதிபட ஆணித்தரமான (பெரியார் வலைக்காட்சி உதவியுடன்) படக்காட்சிகள் மூலமாக ஒவ்வொரு பொருளையும் காட்டி அது எப்படி அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்தன அதற்கு எப்படி அறிவியல் ரீதியான கணக்கு செய்வது என்பதை விளக்கிக்காட்டப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியின் மூலம் நமக்குக் கிடைத்த பானை ஓடு, சுடுமண் சிற்பங்கள், முதுமக்கள் தாழி, செம்பு, செம்பால் ஆன ஆபரணங்கள், பொன்னால் ஆன நெற்றிப் பொட்டு மற்றும் பல ஆபரணங்களை விளக்கி தமிழர்களின் மூத்த தொன் மையான நாகரிகத்திற்கு சான்றுகளை எடுத்துக் கூறப்பட்டது.
ஆதிச்சநல்லூர் - சிந்துச்சமவெளி நாகரிகம்
ஆதிச்சநல்லூர் மக்கள் போர்க்கலையில் மிகச் சிறந்தவர்களாக விளங்கினார்கள். ஆதிச்சநல்லூர் செப்பு வாள்களுக்கும், சிந்துச் சமவெளி நாகரிக செப்பு வாள்களுக்கும் தொப்புள் கொடி தொடர்பு இருந்ததையும்,
 கிடைத்த சான்றுகளை வைத்து நமது வரலாற்றை வலிமைபடுத்துவதுதான் சிறந்த வரலாற்று ஆய்வாளர்களின் கடமை என்றும் பேசப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் செம்புச் சுரங்கம்
ஆதிச்சநல்லூரில் செம்புச் சுரங்கம் இருந்ததை யும் அப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் மூலம் விளக்கிக் காட்டப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சிறீவைகுண்டம், ஆதிச் சநல்லூரில் இடுகாட்டின் பரப்பளவே 114 ஏக்கர் இருந்தது
ஏராளமான பொருள்கள்
ஆதிச்சநல்லூரில் 1899 முதல் 1904 வரை ஆறு ஆண்டுகள் எம்.லூயிஸ் என்பவரும், ஜே.ஆர். ஹெண்டர்சன் என்பவரும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ததை விளக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் மண்ணடுக்கு நிலை, ஈமக்குடில்கள், உலைக்களங்கள் உலோகத் தொழிற்சாலை, எளிதில் துருப்பிடிக்காத இரும்பு, வெண்கலப் பொருள்கள் இருந்ததை ஆதாரத்துடன் விளக்கப்பட்டது..
கறுப்பு - சிவப்பு
இங்குதான் கறுப்பு - சிவப்பு பானைகள் இருந்தன. ஈமத் தாளிகளிலும் கறுப்பு - சிவப்பு இருந்திருக்கின்றன. இவைகள் எல்லாம் ஆராய்ச்சி யில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
மற்றும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த ஆதாரத்தில் தானியம், நெல், நாரை, தாவரம், மனிதன், விலங்கு போன்றவை இருந்தன.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த 13 மண்டை ஓடு களும் திராவிடர் மண்டை ஓடு என்பது மானுடவி யல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதையும் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.
அதேபோல ஆதிச்சநல்லூர் பெண் உருவ வெண்கலச் சிலை, அலங்கார பூச்செடிகள், வளை யல்கள், மோதிரங்கள், போர்க்கருவிகள் குதிரை களுக்குப் பயன்படக் கூடிய கருவிகள், மண்வெட்டி மற்றும் வீட்டு உபயோகக் கருவிகள், இரும்பு சரவிளக்குத் தாங்கிய மேலே தொங்கும் கம்பி, நெசவுக்குரிய கருவி, நெருப்புப் பொறி உருவாக்கப் பயன்பட்ட பொருள்கள், சிறு குத்து வாள்கள், அரசன், அரசி பொன் மகுடம்  போன்றவைகளைப் பற்றி விளக்கப்பட்டது.
நெற்றிப்பட்டம்

பண்டை தமிழர் வாழ்ந்த ஆதிச்சநல்லூரில் பெண் அல்லது பெண் உறவினர் இறந்து போனால் ஆணுக்கு நெற்றிப்பட்டம் கட்டும் தங்க இழை ஆகியவைகளைப் பற்றி மிகச்சிறப்பாக விளக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக